முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
1817
பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது.
2000
இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
2006
முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
1823
சிமோன் பொலிவார் பெருவின் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.
1846
எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1858
“55 பண்டோரா” என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1898
ஆஸ்திரியாவின் அரசி பவேரியாவின் எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.
1918
ரஷ்ய உள்நாட்டுப் போர்: செஞ்சேனை கசான் நகரைக் கைப்பற்றியது.
1919
போலந்து, அங்கேரி, செக்கோசிலோவாக்கியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளின் விடுதலையை ஆஸ்திரியாவும் அதன் கூட்டு நாடுகளும் அங்கீகரித்தன.
1937
நடுநிலக் கடலில் பன்னாட்டுக் கடற்கொள்ளை பற்றிய பிரச்சினையைத் தீர்க்க ஒன்பது நாடுகள் மாநாடு நடத்தின.
1939
இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலியாவின் ஒக்சுலி என்ற நீர்மூழ்கி தவறுதலாக பிரித்தானியாவின் டிரைட்டன் நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1939
இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்து, நேச நாடுகளான போலந்து, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய இராணுவம் மடகாசுகரில் தரையிறங்கி மடகாஸ்கர் சண்டையில் நேச நாடுகளின் தாக்குதல்களை மீள ஆரம்பித்தது.
1943
இரண்டாம் உலகப் போர்: ஆக்சே நடவடிக்கையின் போது, ஜெர்மனியப் படைகள் உரோமை மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது.
1960
எத்தியோப்பியாவின் அபீபி பிக்கிலா உரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் வெறுங்காலுடன் ஓடித் தங்கப் பதக்கம் பெற்றார்.
1965
இந்தியா – பாகிஸ்தான் போர் – அம்ரித்சர் நகரை பாக்கிஸ்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1967
கிப்ரால்ட்டர் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
1974
கினி – பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1976
பிரித்தானிய விமானம் ஒன்று யுகோசுலாவியாவின் சாகிரேப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் உயிரிழந்தனர்.
1977
பிரான்சில் கடைசித் தடவையாக கழுத்து துண்டிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2000
சியேரா லியோனியில் இரண்டு கிழமைகளுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பிரித்தானியப் போர்வீரர்களை பிரித்தானிய இராணுவம் நடத்திய பராசு நடவடிக்கையில் விடுவித்தனர். உள்நாட்டுப் போர் அங்கு முடிவுக்கு வந்தது.
2002
சுவிட்சர்லாந்து, ஐ.நாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.
2007
1999 அக்டோபர் இராணுவப் புரட்சியை அடுத்து, ஏழாண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
2008
வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.
2017
கரிபியன் தீவுகளில் தாக்கிய இர்மா சூறாவளியினால் 134 பேர் இறந்தனர்.




