யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
1889
யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
1998
யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன் மற்றும் இலங்கை படைத்துறையின் யாழ் நகரத் தளபதி சுசாந்த மெண்டிஸ் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
1802
பிரான்ஸ் சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.
1803
டெல்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.
1813
பிரித்தானிய அமெரிக்கப் போர்,
1812
பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை ஊடுருவும் நோக்கில் வெர்ணன் மலையை அடைந்தன.
1852
புரட்சியை அடுத்து புவெனசு ஐரிசு குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
1857
ஐக்கிய அமெரிக்கா, யூட்டாவில் மெடோசு மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
1893
முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
1897
எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னர் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினார்.
1905
நியூயார்க் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
1906
மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
1914
முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த ஜேர்மனியப் படைகளை வெளியேற்றினர்.
1916
கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். இப்பாலம் முன்னர் 1907, ஆகஸ்ட் 29 இலும் உடைந்தது.
1919
ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஒண்டுராசினுள் நுழைந்தனர்.
1943
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியப் படைகள் கோர்சிகா மற்றும் கொசோவோவைக் கைப்பற்றின.
1944
இரண்டாம் உலகப் போர்: மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மனியப் படையெடுப்பு ஆகனில் இடம்பெற்றது.
1944
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
1945
இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலியப் படைகள் போர்னியோவில் ஜப்பானியரால் நடத்தப்பட்ட போர்க் கைதிகளின் முகாமைக் கைப்பற்றின.
1945
இரண்டாம் உலகப் போர்: போர்னியோ தீவில் ஜப்பானியரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை அவுஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15-இல் கொல்லப்படவிருந்தனர்.
1954
சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
1965
இந்திய – பாகிஸ்தான் போர்: இந்தியத் தரைப்படை லாகூருக்குத் தென்கிழக்கே பாக்கிஸ்தானின் பார்க்கி நகரைக் கைப்பற்றியது.
1968
பிரான்சில் நீசு நகரில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் உயிரிழந்தனர்.
1970
செப்டம்பர் 6 இல் கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த 88 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இஸ்ரேலியர்கள் செப்டம்பர் 25 வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
1973
சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. ஜனாதிபதி சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1974
அமெரிக்காவில் வட கரொலைனாவில் சார்லட் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.
1978
பெரியம்மை நோயினால் இறந்த கடைசி நபராக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜனெட் பார்க்கர் அறியப்படுகிறார்.
1982
பாலத்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூத் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.
1989
அங்கேரியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கிழக்கு ஜேர்மனி அகதிகள் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல அங்கேரி அனுமதி அளித்தது.
1992
அவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
1997
நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.
1997
ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான நாடாளுமன்றத்தை அமைக்க இஸ்க்காட்லாந்து மக்கள் வாக்களித்தனர்.
2001
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
2005
காசா கரையில் இருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றும் பணியை இஸ்ரேல் முடித்தது.
2007
ரஷ்யா எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை என அழைக்கப்படும் மிகப்பெரும் மரபுசார் ஆயுதத்தைச் சோதித்தது.
2008
கால்வாய் சுரங்கத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் சுரங்கப் போக்குவரத்து ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டது.
2012
பாகிஸ்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 315 பேர் உயிரிழந்தனர்.
2012
லிபியாவில் பங்காசி நகரில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
2015
சவூதி அரேபியாவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இடம்பெற்ற பாரந்தூக்கி விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர், 394 பேர் காயமடைந்தனர்.





