உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

பாகல் துளிர்!

முதன் முதலில் எனது கவிதை ஒன்று நூலுருவாக்கம் கண்டது எனது பாடசாலை மூலமாகவேதான். முதலாம் ஆண்டு தொடக்கம் பதினொராம் ஆண்டு வரை கற்று ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்து இன்று ஒரு கற்ற மனிதனாக பிரகாசிக்க எனது பாடசாலையான மட்/பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயம் ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பகுதியில் விவசாய கிராமத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை இன்று பல முன்னேற்றங்களை கண்டுள்ள போதிலும் முதன் முதலில் இந்நூலினை வெளியிட்டுள்ள போதிலும் அதில் என்னுடைய பாடசாலை மீதான கவிதையும் இடம்பெற்றுள்ளதை காணலாம்.

“எனது பாடசாலை” எனும் தலைப்பில்,”பெற்றதைக் கொண்டு
பெருமை தேடிக் கொள்வது – கல்வி
பெருமைக்காக தேடிக்
கொள்வது அல்ல- கல்வி
பெருமை பொறுமை
இரண்டும்
தந்தது- பள்ளி

சிறுவர்களாய் இருந்த போது
பென்சில் பிடிக்க
பழக்கியது – பள்ளி
பெரியவர்களானதும் பேனா
பிடிக்க
கற்றுத் தந்தது எம்- கல்வி
தவறுகளைக் களைந்து
சரிவச் செய்ய
வழிகாட்டியது எம்- ஆசான்?
நல்வழி

அன்பு நிறைந்த கூடம்
அது கற்றுத்தந்ததோடு ஒழுக்கமான பாடம்
ஆழம் அறியமுடியாத ஆசிரியர் மனம்
பாடசாலைக்கு உதவிடும் ஊரார் குணம்
ஆழமாய் நடப்பட்டது 1954 அன்று
வாகை சூடுகிறது பாவற்க்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலம் என்று

விதைகள் கீழ் நோக்கி
ஏறியப்பட்டால் தான்
விருட்சங்கள் மேல் நோக்கி வளரும்
விதையாக தூவப்பட்ட
எம் பாடசாலை பெரும் விருட்சமாக மாறிய தருணம் இதுவே”

இச்சிறிய கவிதையினை பதிப்பு செய்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கன்னி கவிதைக்கான ஆயத்தங்கள், ஆர்வங்கள் சொல்லில் அடங்காதவை.

எழுதுகின்ற கவிதைகளை ஒரு எழுத்தாளன் நூலாக்கம் கொடுத்து வெளியிடும் போது அவன் இன்னொரு முறை பிறக்கின்றான். இதன் ஆரம்பமே 2025 ஆம் ஆண்டு தனிக் கவிதைகளின் தொகுப்பாக ஒரு நூலினையும் என்னை வெளியிடவும் செய்தது.

நன்றி.

நூல் :- பாகல் துளிர்
எழுத்தாளர் :- வி. வித்தியாலயம்
விலை:-ரூபாய். 300

விமர்சகர்
எழுத்தாளர்
-ஆதன் குணா-

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran