உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

1990
சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1839
ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.

1850
கலிபோர்னியா 31 ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

1855
கிரிமியப் போர்: செவஸ்தப்போல் நகரில் இருந்து ரஷ்யப் படைகள் விலகின.

1892
எட்வார்டு எமர்சன் பர்னார்டு வியாழனின் மூன்றாவது சந்திரன் அமல்தியாவைக் கண்டுபிடித்தார்.

1922
கிரேக்க – துருக்கியப் போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1924
அமெரிக்காவின் அவாயில், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

1939
பர்மாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பர்மிய தேசிய வீரர் ஒட்டாமா சிறையில் இறந்தார்.

1940
வடக்கு டிரான்சில்வேனியாவை உருமேனியாவிடம் இருந்து அங்கேரிக்குக் கையளிக்கும் நிகழ்வில் இடம்பெற்ற கலவரங்களில் 93 உருமேனியரும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.

1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டுகளை வீசியது.

1944
பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத்-சார்பு அரசு பதவியேற்றது.

1945
இரண்டாம் சீன – ஜப்பானியப் போர்: ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.

1947
முதல் தடவையாக மென்பொருள் வழு ஒன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் கணினி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

1948
கிம் இல்-சுங் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசை அதிகாரபூர்வமாக அமைத்தார்.

1954
அல்சீரியாவில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 1,243 பேர் உயிரிழந்தனர்.

1965
நியூ ஓர்லென்ஸ் அருகே பெட்சி சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.

1969
கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1970
பிரித்தானிய விமானம் ஒன்று பாலஸ்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1971
நியூயோர்க்கில் அட்டிக்கா சிறைச்சாலையில் நான்கு நாட்கள் கலவரம் ஆரம்பமானது. இறுதியில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

1991
சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.

1993
பலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலைத் தனிநாடாக அங்கீகரித்தது.

2001
ஆப்கானிஸ்தானில் வடக்குக் கூட்டணித் அகமது சா மசூது இரண்டு அல் காயிதா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2004
இந்தோனிசியா, ஜகார்த்தாவில் ஆஸ்திரேலியத் தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

2009
துபை மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2012
ஈராக்கில் இடம்பெற்ற பல்முனைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2015
ஐக்கிய இராச்சியத்தில் அதிக காலத்துக்கு ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.

2016
வட கொரியா தனது ஐந்தாவதும், மிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran