உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

மாங்குளத்தில் வடிகால் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர்ப் பகுதியில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினையை குறைப்பதற்காக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வடிகால் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த வடிகால் சுத்திகரிப்பு பணிகளின் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டு நிலையான தீர்வுகளை ஆராய்ந்தனர்.

இதன்படி வடிகால் சுத்தம்படுத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன், மாங்குளம் நகரின் வெள்ளப்பெருக்கு பாதிப்பு குறையும் என நம்பப்படுகிறது.

கடந்த 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் மாங்குளம் நகரம் வெள்ளநீரால் மூழ்கியதுடன், சுற்றியுள்ள நிலங்களிலும் நீர் தேங்கியிருந்தது.

இவ்வாண்டு மேற்கொள்ளப்படும் இந்த வடிகால் சுத்திகரிப்பு பணிகள், அந்தப் பிரச்சினைகளை பெருமளவில் தீர்க்க உதவும் என நம்பப்படுகிறது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran