உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

உலகக் கிண்ண கால்பந்து தொடர் – கொங்கோவை வீழ்த்தியது கொலோம்பியா!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு “K” பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோ ஜனநாயக குடியரசை (DR Congo) வீழ்த்தி வெற்றி பெற்றது.

போட்டியின் 76 ஆவது நிமிடத்தில் கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் தனது அணியின் வெற்றிக்கான ஒரே கோலை அடித்தார்.

கொங்கோ ஜனநாயக குடியரசு கோல்கீப்பர் லியோனல் எம்பாசி, பல கோல் வாய்ப்புகளைத் தடுத்து கொலம்பியாவின் தாக்குதல்களைச் சிறப்பாக முறியடித்தார்.

இருப்பினும், முனோஸின் துல்லியமான கோல் கொலம்பியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தது.

இந்த வெற்றியின் மூலம், கொலம்பியா அணி கால்பந்து தொடரின் 32 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran