உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

வவுனியாவில் சமகாலச் சமூகமும் போராளிகளின் வகிபாகமும் எனும் தலைப்பில் நிகழ்வு.!

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகாலச் சமூகமும் போராளிகளின் வகிபாகமும் எனும் தலைப்பில் வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று (05) நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்ததோடு போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் உரைகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, முன்னாள் வவுனியா மாநகர பிரதிமுதல்வர் ப.கார்த்தீபன், சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை உட்பட பல்வேறுபட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran