உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

தமிழ்ப் பெயர்கள்!

சிறிதளவேனும் வேற்று மொழிகளின் கலப்படமின்றி ஆரம்பகால தமிழர்கள் தமது குழந்தைச் செல்வங்களுக்கு ஆகச் செறிந்த கருத்து பொதிந்த தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் குழந்தைகளுக்கு குல தெய்வ பெயர்களை வைத்து அழைக்கப்பட்ட நிலை இருந்தது. கருப்பையா, முனியய்யா, முருகன், வெள்ளையம்மாள், காளியம்மாள், மாரியம்மாள் எனும் வகையில் பெயர்கள் இருந்தன. ஒரே ஊரில் ஒரே தெருவில் இரண்டு மூன்று குழந்தைகள் ஒரே பெயரில் அழைக்கப்படும் நிலையும் இருந்தது.

ஆகச் சிறந்த தமிழ்ப் பெயர்கள் சிலவற்றை எடுத்துக்காட்டாக,
அகரன்
இளம்பரிதி
எழிலன்
கரிகாலன்
குமரன்
மலரோன்
மதிமாறன்
முகிலன்
வானவன்
அமுதினி
ஈழமகள்
எழிலழகி
குழலி
சொல்லழகி
தமிழி
நிறைமதி
மலர்விழி

நாகரிக வளர்ச்சியோடு மெது மெதுவாக மொழி வளர்ச்சி குன்றியது. இதனால் நாவில் இருந்து வழுக்கிய தமிழ்ப் பெயர்கள் மெது மெதுவாக நமது மண்ணில் இருந்தும் கரைகிறது. வடமொழி சொல்லாடல்கள் குறிப்பாக சமஸ்கிரதம், அதே போல் ஆங்கில மொழி சொல்லாடல்கள் புணர்ந்து ஒரு புதிய மொழி தோன்றுவதோடு அதே நமது குழந்தைகளுக்கு வைப்பது மறைமுகமான மொழி அழிப்பும் இன அழிப்புமாகும்.

தமிழில் பெயர் வைத்தால் பழமைவாதம் என்ற மாயையை உடைத்தெறிந்து செம்மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்க ஆயத்தமாக வேண்டும்.

நூல் :- தமிழ்ப் பெயர்கள்
எழுத்தாளர் :- பாலா
விலை :- ரூபாய். 270

எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா-

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran