உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

கர்நாடகாவில் கோரவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் யெல்லாப்பூர் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை-52-ல் உள்ள அரபியில் காட் பகுதி பாலகாரா கிராஸ் அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் லாரியும் பல்நோக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யெல்லாப்பூர் போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தார்வாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் எம்யுவி வாகனத்தில் தர்மஸ்தலா மற்றும் சிக்கமகளூரு ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணமாகச் சென்று கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran