உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1814
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன.

1848
சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.

1857
மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.

1890
ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.

1915
பிரெஞ்சுப் போர்வீரர்கள் ஆர்மீனிய இனப்படுகொலைகளில் இருந்து தப்பிய 4,000 இற்கும் அதிகமானோரைக் காப்பாற்றினர்.

1923
தெற்கு ரொடீசியா (இன்றைய சிம்பாப்வே) ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

1933
அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.

1940
குகை ஓவியங்கள் பிரான்சில் லாசுக்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.

1940
நியூ செர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.

1942
இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் ஜேர்மனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.

1943
இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜேர்மனிய படைத்தளபதி ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

1948
முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1959
லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1974
எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1977
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.

1980
துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1990
ஜேர்மானிய மீளிணைவுக்கான ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது.

1992
நாசாவின் எண்டெவர் விண்ணோடம் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2001
அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான “ஆன்செட் அவுஸ்திரேலியா” மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.

2003
லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது.

2006
திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது “தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்” என்று தெரிவித்தார். இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.

2008
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.

2015
மத்தியப் பிரதேசம், பெட்லாவாத் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran